Homeசெய்திகள்சினிமா'வீர தீர சூரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘வீர தீர சூரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.'வீர தீர சூரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். எதார்த்தமான கல்ட் கமர்சியல் படமாக உருவாகும் இந்த படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'வீர தீர சூரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, ஆவடியில் வேல் டெக் யூனிவர்சிட்டியில்
மாலை 7 மணி அளவில் நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் ட்ரைலரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ