Homeசெய்திகள்சினிமா'வீர தீர சூரன்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

‘வீர தீர சூரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

வீர தீர சூரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.'வீர தீர சூரன்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.யு. அருண்குமார். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து சேதுபதி, சித்தா என அடுத்தடுத்த வெற்றி படங்களையும் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் வீர தீர சூரன் – பாகம் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.'வீர தீர சூரன்' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு! இந்த படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்தது இந்த படமானது வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் அருண்குமாரின் பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 26) அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீர தீர சூரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ