வீர தீர சூரன் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் விக்ரம், சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை ஹெச். ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டம் போட்டு வருகின்றனர்.
Intha #Kaali oda sambavathuku time kurichaachu🔥
#VeeraDheeraSooran pic.twitter.com/EsKi03dH9U
— Vikram (@chiyaan) December 8, 2024
ஆனால் விடாமுயற்சி, கேம் சேஞ்சர், வணங்கான் ஆகிய படங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாவதால் வீர தீர சூரன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று (டிசம்பர் 9) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசரில் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.