Homeசெய்திகள்சினிமாஓடிடிக்கு வரும் 'வீர தீர சூரன் பாகம் 2' ..... எப்போ, எதுல பார்க்கலாம்?

ஓடிடிக்கு வரும் ‘வீர தீர சூரன் பாகம் 2’ ….. எப்போ, எதுல பார்க்கலாம்?

-

- Advertisement -

விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஓடிடிக்கு வரும் 'வீர தீர சூரன் பாகம் 2' ..... எப்போ, எதுல பார்க்கலாம்?

கடந்த மார்ச் 27ஆம் தேதி விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். தேனி ஈஸ்வர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஆக்சன் திரில்லர் ஜானரில் வெளியான இந்த படத்தில் துஷாரா விஜயன், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஓடிடிக்கு வரும் 'வீர தீர சூரன் பாகம் 2' ..... எப்போ, எதுல பார்க்கலாம்?மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியிருந்த இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியானது. அந்த வகையில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் விக்ரம் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். இந்நிலையில் இப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ