வீர தீர சூரன்- 2 படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக அப்டேட் கிடைத்துள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வீர தீர சூரன். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி, மதுரை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தினை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.