சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரம்’ படத்தில் ஹிந்தி ரீமேக் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். ஐந்து அண்ணன் தம்பிகள் கிராமத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பின்னர் கதாநாயகி குடும்பத்திற்கு ஆபத்து வர கதாநாயகன் அந்த ஊருக்கு சென்று அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
இந்நிலையில் சல்மான் கான் நடிப்பில் ‘வீரம்‘ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் வெங்கடேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பர்ஹாத் ஷாம்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் ஒரு பாடலுக்கு ராம்சரண் சிறப்பு தோற்றத்தில் வந்து நடனமாடியுள்ளார். படத்திற்கு ‘கிஷி கா பாய் கிஷி கா ஜான்‘(Kisi Ka Bhai Kisi Ki Jaan) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ட்ரெய்லரை பார்க்கும்போது வீரம் படத்தில் இருந்து கதையை ஓரளவுக்கு மாற்றி இருப்பதாகத் தெரிகிறது. படம் முழுக்க கண் கவரும் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.