நடிகர் சூர்யா தற்போது கங்குவா, சூர்யா 44 என அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சூர்யா, வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தனது 49 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். எனவே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வேல் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பிலும் ஹரியின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் வேல். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சூர்யாவுடன் இணைந்த அசின், வடிவேலு, லட்சுமி, கலாபவன் மணி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல், காமெடி, சண்டை, எமோஷனல் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
மேலும் கிராமத்து பின்னணியில் பரபரப்பாக செல்லும் திரைக்கதையில் வெளியான வேல் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் வேல் திரைப்படமானது வருகின்ற ஜூலை 19ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளையொட்டி மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அன்று இந்த படத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்ததோ அதை அளவிற்கு இன்றும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -