மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் படத்திலிருந்து விலகாத எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், குட் நைட் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் மணிகண்டன். தற்போது அறிமுக இயக்குநர் பிரபுராம் விியாஸ் எழுதி இயக்கியிருக்கும் லவ்வர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள விலகாத என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிகர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். லவ்வர் படம் 2024-ம் ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.