விமல், கருணாஸ் நடிப்பில் வெளியான போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
நடிகர் விமல் தற்போது தேசிங்குராஜா 2, சார் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இவர் போகுமிடம் வெகு தூரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விமலுடன் இணைந்து கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தீபா சங்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் இவர்களுடன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை மைக்கேல் கே ராஜா இயக்கியிருந்தார். படத்தினை ஷாக் 9 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ரகுநந்தன் இதற்கு இசை அமைத்திருந்தார். டிமல் சேவியர் எட்வர்ட்ஸ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டிருந்தார். இந்த படத்தில் நடிகர் விமல் அமரர் ஊர்தி ஓட்டுனராக நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் பெற்று வந்தது. இந்நிலையில் இப்படம் இன்று (அக்டோபர் 8) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.