விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விமல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பசங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் களவாணி, தேசிங்கு ராஜா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றார். கடைசியாக இவரது நடிப்பில் போகுமிடம் வெகுதூரமில்லை எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் தேசிங்கு ராஜா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் விமல். இதற்கிடையில் இவர் போஸ்ட் வெங்கட் இயக்கத்தில் சார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு மா பொ சி என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு சார் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தில் விமலுடன் இணைந்து சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனும் கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தினை தயாரித்துள்ளது. சித்து குமாரின் இசையிலும் இனியன் ஜெய் ஹரிஷின் ஒளிப்பதிவியிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.