விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் விமல், பசங்க படத்தில் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் கடந்த ஆண்டில் துடிக்கும் கரங்கள் எனும் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து நடிகர் விமல், எழில் இயக்கத்தில் உருவாகி வரும் தேசிங்கு ராஜா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த கதை களத்தில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விமல், மா.பொ.சி எனும் படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிராஜ் தயாரிக்கிறார். இந்த படமானது கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்த படம் கல்வி சம்பந்தமான படம் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய அறிவிப்பு நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.