விமல் நடிக்கும் போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல்ஆரம்பத்தில் கில்லி போன்ற படங்களில் சரியா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பசங்க திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் தேசிங்கு ராஜா 2, சார், கலகலப்பு 3 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் போகுமிடம் வெகு தூரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விமலுடன் இணைந்து கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் நடிகர் விமல் அமரர் ஊர்தி ஓட்டுநராக நடித்திருக்கிறார். இந்த படத்தை மைக்கேல் கே ராஜா இயக்கியிருக்கிறார். ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ரகுநந்தன் இதற்கு இசையமைத்துள்ளார். இதற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தில் விமல், கருணாஸ் தவிர தீபா ஷங்கர், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 23 அன்று திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி, மாரி செல்வராஜன் வாழை போன்ற படங்கள் ஆகஸ்ட் 23 ல் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.