Homeசெய்திகள்சினிமாபோஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் 'சார்'.... இரண்டாவது பாடல் வெளியானது!

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘சார்’…. இரண்டாவது பாடல் வெளியானது!

-

விமல் நடிக்கும் சார் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் 'சார்'.... இரண்டாவது பாடல் வெளியானது!

நடிகர் விமல் நடிப்பில் கடைசியாக குலசாமி, துடிக்கும் கரங்கள் போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்கள் விமலுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்ததாக விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2, போகுமிடம் வெகு தூரம் இல்லை போன்ற படங்கள் உருவாகியுள்ளன. மேலும் இவர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில் இவர் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் சார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் இணைந்து சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருடன் இணைந்து எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தை தயாரித்துள்ளது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க இனியன் ஜெ ஹரிஷ் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து முதல் பாடலும் வெளியான நிலையில் தற்போது பூவாசனை எனும்
இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். விவேகா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ