Homeசெய்திகள்சினிமாவிமல் நடிக்கும் 'சார்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

விமல் நடிக்கும் ‘சார்’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

-

விமல் நடிக்கும் சார் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விமல் நடிக்கும் 'சார்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

நடிகர் விமல் பசங்க, களவாணி, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக போகுமிடம் வெகு தூரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இவரது நடிப்பில் சார் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விமல் தவிர சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தினை தயாரித்திருக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க இனியன் ஜெய் ஹரிஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். விமல் நடிக்கும் 'சார்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ