Homeசெய்திகள்சினிமாவிமல் நடிப்பில் உருவாகும் 'சார்'..... டீசர் குறித்த அறிவிப்பு!

விமல் நடிப்பில் உருவாகும் ‘சார்’….. டீசர் குறித்த அறிவிப்பு!

-

விமல் நடிப்பில் உருவாகும் சார் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விமல் நடிப்பில் உருவாகும் 'சார்'..... டீசர் குறித்த அறிவிப்பு!நடிகர் விமல் பசங்க திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, தேசிங்கு ராஜா போன்ற பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர். மேலும் இவர் தேசிங்கு ராஜா 2, கலகலப்பு 3 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் விமல் சார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே பூஜையுடன் தொடங்கப்பட்டது. மேலும் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு மா.பொ.சி என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு சார் என்று மாற்றப்பட்டுள்ளது.விமல் நடிப்பில் உருவாகும் 'சார்'..... டீசர் குறித்த அறிவிப்பு! இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ