இயக்குனர் வெங்கட் பிரபு, லியோ ட்ரெய்லரை பார்த்து லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார்.
மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட காரணத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லியோ பட ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். ட்ரெய்லரானது வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளுடன் காட்டப்பட்டது. அதற்கேற்றார் போல அனிருத்தும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக அந்த கழுதைப்புலி காட்சிகள் சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Vera level brother!! Absolute 🔥🔥🔥 https://t.co/6kYHudD48N
— venkat prabhu (@vp_offl) October 5, 2023
லியோ படத்தின் டிரைலர் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது எனலாம். இது குறித்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில், ” வேற லெவல் பிரதர்” என்று லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.