Homeசெய்திகள்சினிமாவிஜய் பிறந்தநாளில் ட்ரீட் கொடுக்க இருக்கும் வெங்கட் பிரபு!

விஜய் பிறந்தநாளில் ட்ரீட் கொடுக்க இருக்கும் வெங்கட் பிரபு!

-

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படம் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான் பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கேஜிஎப் பாகுபலி படங்களேப் போலவே லியோ படத்தேயும் பான் இந்தியா அளவில் சூப்பர் ஹிட் ஆக்க விஜய் கடினமாக உழைத்து வருகிறாராம்.

அந்த வகையில் லியோ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து விஜய் தனது அடுத்த படமான
தளபதி 68-ல் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விஜயுடன் தமன்னா, க்ரித்தி செட்டி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படம் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வெளிவந்த மாநாடு படத்தை போலவே அரசியல் கதையில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தின் புதிய தகவல்கள் குறித்து வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த படத்திற்கு கேம், பாலிடிக்ஸ், ஹேங்க் ஓவர், சிக்ஸர், ரி யூனியன் போன்ற ஆங்கில வார்த்தைகளில் தலைப்பு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

MUST READ