விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து விஜயின் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். வெங்கட் பிரபு இதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஜயின் லியோ படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு தளபதி 68 படத்தின் படப் படிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வெங்கட் பிரபு தளபதி 68க்கு பிறகு தனது அடுத்த படத்தை கிச்சா சுதீப் நடிப்பில் இயக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெங்கட் பிரபு பலமுறை கிச்சா சுதீப்பை நேரில் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் கிச்சா சுதிப்பிற்கு கதை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.