Homeசெய்திகள்சினிமாதளபதி 68 படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவால் கடுப்பான விஜய்.... ஏன் தெரியுமா?

தளபதி 68 படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவால் கடுப்பான விஜய்…. ஏன் தெரியுமா?

-

தளபதி 68 படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவால் கடுப்பான விஜய்.... ஏன் தெரியுமா?பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படத்தை இயற்றியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் நடிகர் விஜய் இளமையாக காட்டுவதற்கு டிஏஜிங் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாகவே நடிகர் விஜய் படப்பிடிப்பு சமயத்தில் சீரியஸாக இருக்கக்கூடியவர் அதே சமயம் படப்பிடிப்பில் கலகலப்பாக இருக்கக்கூடியவர் வெங்கட் பிரபு. இந்நிலையில் தான் தளபதி 68 படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபு, நடிகர் விஜய்யை கடுப்பாகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தளபதி 68 படத்திற்கு விஜய் வசனம் எழுதி வருகிறார். வெங்கட் பிரபு அந்த வசனங்களை படப்பிடிப்பிற்கு வந்த பிறகு மாற்றுமாறு ‌ கூறியிருக்கிறார். வசனம் பேசுவதற்காக விஜய் முதல் நாளே
தயாராக வேண்டும் என்பதால் வெங்கட் பிரபுவின் இச்செயலினால் இதனால் விஜய் சற்று அதிருப்தி அடைந்துள்ளார். எனவே முதல் நாளே வசனங்களை முடிவு செய்துவிட்டு எனக்கு கொடுங்கள் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம் விஜய்.தளபதி 68 படப்பிடிப்பில் வெங்கட்பிரபுவால் கடுப்பான விஜய்.... ஏன் தெரியுமா?

மேலும் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தளபதி 68 திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ