Homeசெய்திகள்சினிமாகஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு

கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு

-

கஸ்டடி படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு

இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் 11-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் கஸ்டடி ஆகும். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் கஸ்டடி படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, பிரபல இளம்தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிரடி போலீஸ் திரைப்படமாக தயாராகும் கஸ்டடி படத்திற்கு SR.கதிர் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து கஸ்டடி திரைப்படத்திற்கு, இசை அமைத்துள்ளனர். கஸ்டடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கஸ்டடி படத்தின் முன்னோட்டம் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இத்திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ