Homeசெய்திகள்சினிமாசுசீந்திரனின் '2K லவ் ஸ்டோரி'.... ட்ரைலரை வெளியிடும் வெண்ணிலா கபடி குழு பட நடிகர்கள்!

சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’…. ட்ரைலரை வெளியிடும் வெண்ணிலா கபடி குழு பட நடிகர்கள்!

-

- Advertisement -

சுசீந்திரனின் 2K லவ் ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக இருக்கிறது.சுசீந்திரனின் '2K லவ் ஸ்டோரி'.... ட்ரைலரை வெளியிடும் வெண்ணிலா கபடி குழு பட நடிகர்கள்!

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்த இவர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் 2K லவ் ஸ்டோரி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அறிமுக நடிகர் ஜெகவீர் மற்றும் மீனாட்சி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து வினோதினி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.சுசீந்திரனின் '2K லவ் ஸ்டோரி'.... ட்ரைலரை வெளியிடும் வெண்ணிலா கபடி குழு பட நடிகர்கள்! அதே சமயம் இந்த படமானது 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 2K லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர் இன்று (ஜனவரி 22) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லரை சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்திருந்த விஷ்ணு விஷால் மற்றும் சூரி ஆகியோர் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ