Homeசெய்திகள்சினிமா'வெப்பம் குளிர் மழை' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

-

வெப்பம் குளிர் மழை படத்தின் முதல் பாடல் கொடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் முன்னணி இயக்குனர்களின் படங்கள் சில நேரங்களில் தோல்வி படமாக அமைந்தாலும் அந்த இடத்தை பூர்த்தி செய்ய பல புதிய இயக்குனர்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அதன்படி கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான புது முக இயக்குனர்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள். அயோத்தி படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி, டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு, குட் நைட் படம் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன், போர் தொழிலை இயக்கிய விக்னேஷ் ராஜா, ஜோ பட இயக்குனர் ஹரிஹரன் ராம் உள்ளிட்ட அறிமுகம் இயக்குனர்கள் தங்களின் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்து விட்டனர்.'வெப்பம் குளிர் மழை' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

இந்நிலையில் அறிமுக இயக்குனர் பஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் வெப்பம் குளிர் மழை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதாவது கோமாதாவின் உடம்பில் ஒரு பெண்ணின் தலையும் அந்த கோமாதாவின் வயிற்றில் ஒரு குழந்தையும் இருப்பது போன்று அந்த போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டரின் மூலம் இந்த படம் குழந்தையின்மை பற்றி பேசும் படமா? அல்லது பெண்ணியம் பேசும் படமா? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இருப்பினும் இது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'வெப்பம் குளிர் மழை' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

வெப்பம் குளிர் மழை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இஸ்மத் பானு கதாநாயகியாக நடித்துள்ளார். எஃப்டிஎஃப்எஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார். பிரித்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டமக்கு டமக்கா எனும் முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ