Homeசெய்திகள்சினிமாலண்டன் செல்லும் வெற்றிமாறன்.... விரைவில் தொடங்குகிறதா 'வாடிவாசல்'?

லண்டன் செல்லும் வெற்றிமாறன்…. விரைவில் தொடங்குகிறதா ‘வாடிவாசல்’?

-

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். லண்டன் செல்லும் வெற்றிமாறன்.... விரைவில் தொடங்குகிறதா 'வாடிவாசல்'?அதே சமயம் இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருந்த விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேசமயம் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் வாடிவாசல் எனும் திரைப்படம் உருவாகப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி காளைகளை அடக்கும் பயிற்சியையும் மேற்கொண்டார் நடிகர் சூர்யா. லண்டன் செல்லும் வெற்றிமாறன்.... விரைவில் தொடங்குகிறதா 'வாடிவாசல்'?இருப்பினும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்கான VFX பணிகளுக்காக லண்டன் செல்ல இருக்கிறாராம். மேலும் விடுதலை 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார். படத்தில் சூர்யா தவிர நடிகரும் இயக்குனருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ