Homeசெய்திகள்சினிமாகேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி... அசத்தல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்!

கேமிங் டிசைனராக நடித்துள்ள வெற்றி… அசத்தல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர்!

-

- Advertisement -

வெற்றி நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஜீவி பட நடிகர் வெற்றி, தற்போது ‘இரவு’ என்ற புதிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பக்ரீத் படத்தை இயக்கிய ஜெகதீசன் இயக்கியுள்ளார். 

‘இரவு’ படத்திற்கு எல்வி முத்து கணேஷ் இசையமைக்கிறார். தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

“வெற்றி இந்த படத்தில் வீடியோ கேம் வடிவமைப்பாளராக நடிக்கிறார், அவர் புதிதாக வடிவமைக்கும்  கேமில் உள்ள கதாபாத்திரங்களை நிஜத்தில் பார்க்கத் தொடங்குகிறார். இந்த சம்பவம் ஒரு இரவில் திரில்லர் அனுபவங்களை அவருக்கு கொடுக்கிறது.” என்று படம் குறித்து இயக்குனர் தெரிவித்துள்ளார்.

M10 புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. 

வெற்றி மற்றும் ஆரியா செல்வராஜ் ஆகியோருடன், மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜார்ஜ் மேரியன், தீபா சங்கர், பொன்னம்பலம், சேசு மற்றும் கல்கி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

MUST READ