Homeசெய்திகள்சினிமாவெற்றி, கிஷன் தாஸ் நடிக்கும் 'ஈரப்பதம் காற்று மழை'

வெற்றி, கிஷன் தாஸ் நடிக்கும் ‘ஈரப்பதம் காற்று மழை’

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களான கிஷன் தாஸ் மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜீவி படப்புகழ் வெற்றி, முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் பிரபலமான கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஈரப்பதம் காற்று மழை. இப்படத்தை அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கி இருக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஸ்ரீராம் வெங்கடேஷ் இசை அமைத்திருக்கிறார்.

மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளது. மூன்று கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சி விலகல்கள் ஆகியவற்றில் கதை கவனம் செலுத்துவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவு கொடூரமாகவும், அதே சமயம் எப்படி கனிவாகவும் உள்ளது என இப்படம் உணர்த்தும் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் ஒவ்வொரு விவரமும் தனி கவனத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கதை நடைபெறுவதால், முடிந்த அளவு அந்தந்த இடங்களில் அதன் உண்மைத்தன்மையுடன் படம் பிடித்து இருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

MUST READ