Homeசெய்திகள்சினிமாபிசாசு 2 படம் பார்த்து மிரண்டு போன வெற்றி மாறன்

பிசாசு 2 படம் பார்த்து மிரண்டு போன வெற்றி மாறன்

-

- Advertisement -
பிரபல இயக்குனரான மிஷ்கின் படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இதற்கிடையில் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று செய்திகள் பரவி வருகிறது. அதே சமயம் விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிசாசு 2 படம் பார்த்த இயக்குநர் வெற்றிமாறன், என்னயா இப்படி ஒரு படம் எடுத்து வைத்திருக்கிறாய் என்றும், நல்ல திரைப்படம் என்றும் பாராட்டி இருக்கிறார். இதனால், பிசாசு 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

MUST READ