Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்'..... படப்பிடிப்பு தொடங்கியது!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’….. படப்பிடிப்பு தொடங்கியது!

-

கவின் நடிக்கும் மாஸ்க் படத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்'..... படப்பிடிப்பு தொடங்கியது!கவின் நடிப்பில் கடந்த மே 10 அன்று ஸ்டார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் பிளடி பெக்கர், விஷ்ணு எடாவன் இயக்கத்தில் புதிய படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் கவின். இதற்கிடையில் நடிகர் கவின், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இதற்கு மாஸ்க் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விக்ரணன் அசோக் இயக்குகிறார். இதில் கவினுக்கு வில்லியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்'..... படப்பிடிப்பு தொடங்கியது! அதைத் தொடர்ந்து நேற்று (ஜூன்-12) இந்த படத்தின் படப்பிடிப்பு குரோம்பேட்டையில் தொடங்கியுள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெறும் எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ