Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதிக்கு ஜோடியான மஞ்சு வாரியர்..... 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

விஜய் சேதுபதிக்கு ஜோடியான மஞ்சு வாரியர்….. ‘விடுதலை 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதிக்கு ஜோடியான மஞ்சு வாரியர்..... 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!பிரபல இயக்குனர் வெற்றிமாற இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதிகார வர்க்கத்திற்கு கீழ் போராடும் மக்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அம்மக்களின் தலைவனாக விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில் நடிகர் சூரி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதிக்கு ஜோடியான மஞ்சு வாரியர்..... 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர் அட்டகத்தி தினேஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்ற விடுதலை முதல் பாகத்திற்கு பிறகு விடுதலை இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன.விஜய் சேதுபதிக்கு ஜோடியான மஞ்சு வாரியர்..... 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் சேதுபதியும் மஞ்சுவாரியரும் காண்பிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வெளியான தகவலின்படி மஞ்சு வாரியர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது இந்த போஸ்டரின் மூலம் உறுதியாகிவிட்டது. மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் மஞ்சு வாரியருக்கு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் இருந்தது போல விடுதலை 2 திரைப்படத்திலும் மஞ்சுவாரியரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த போஸ்டரில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு ஜோடியான மஞ்சு வாரியர்..... 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!அடுத்ததாக மற்றொரு போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, சட்டையில் ரத்த கரையுடன் கையில் அரிவாளுடன் காணப்படுகிறார். இந்த இரண்டு போஸ்டர்களின் மூலம் பிளாஷ்பேக் போர்ஷனிலும் நிகழ்கால போர்ஷனிலும் விஜய் சேதுபதி எப்படி இருப்பார் என்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ