வெற்றிமாறன் இயக்கத்தின் வெளியான விடுதலை 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக அமைந்த நிலையில் சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இளையராஜா இதற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன், இளவரசு ராஜிவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார். அடுத்தது கென் கருணாஸ் தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவ்வாறு இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் தற்போது வரை உலக அளவில் ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.