Homeசெய்திகள்சினிமாரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் 'வேட்டையன்' பட மனசிலாயோ பாடல் வெளியீடு!

ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் ‘வேட்டையன்’ பட மனசிலாயோ பாடல் வெளியீடு!

-

வேட்டையன் படத்தில் இருந்து மனசிலாயோ பாடல் வெளியாகி உள்ளது.ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் 'வேட்டையன்' பட மனசிலாயோ பாடல் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த படத்தின் மனசிலாயோ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் இந்த பாடலை மறைந்த நடிகரும் பாடகருமான மலேசியா வாசுதேவன் பாடி இருப்பது போன்று கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் யுகேந்திரன் வாசுதேவன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோரும் பாடலை பாடியுள்ளனர். சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடாவில் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ