Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

‘வேட்டையன்’ பட ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10 ) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. ரஜினியின் 'வேட்டையன்' படத்தை காண வந்த நடிகர் தனுஷ்!அதன்படி இன்று வெளியாகி உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். அத்துடன் தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி படத்தில் 100 சதவீதம் தலைவர் மாஸாக காட்டப்பட்டுள்ளதாகவும் இரண்டாம் பாதியில் நல்ல சினிமா அனுபவத்தை தருவதாகவும் வேட்டையன் பட விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்தது படத்தில் மனசிலாயோ மற்றும் ஹண்டர் வந்துட்டார் பாடல் பட்டைய கிளப்புகிறது எனவும் அனிருத்தின் பிஜிஎம் படத்தில் ஓர்க் அவுட் ஆகி இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் படத்தில் கனெக்ட் ஆகவில்லை. முதல் பாதையில் ரஜினிகாந்தின் காட்சிகள் இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் போன்றவை வருகிறது. இரண்டாம் பாதியில் மாஸான ஆக்ஷன் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் இருக்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருக்கின்றன. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பகத் பாசில் காட்சிகள் தான் படத்தில் ஹைலைட். பகத் பாசிலுக்கு இந்த படம் வித்தியாசமான படம். பகத் பாசிலை இந்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

மற்றொரு ரசிகர், “தலைவர் வழக்கம்போல் தூள் கிளப்பியுள்ளார். பகத் பாஸில் கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கிறது. ராணாவின் கதாபாத்திரம் படத்தில் வலுவாக இல்லை. பிஜிஎம் மற்றும் மனசிலாயோ பாடல் சூப்பர். சண்டைக் காட்சிகளும் அருமையாக இருக்கிறது. உணர்வுபூர்வமான காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இரண்டாம் பாதியில் சில தொய்வுகள் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ