Homeசெய்திகள்சினிமாசென்னையில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்... ரஜினி, ராணா பங்கேற்பு...

சென்னையில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்… ரஜினி, ராணா பங்கேற்பு…

-

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு லால் சலாம் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து, ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, நெல்லை, மும்பை, புதுவை என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு, படக்குழு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் ராணா டகுபதி பங்குபெறும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

MUST READ