நடிகர் விஜய் தற்போது கோட் – THE GREATEST OF ALL TIME படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, வைபவ், அஜ்மல் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஏறத்தாழ 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. அதே சமயம் நடிகர் விஜய், இந்தப் படத்திற்கான 50 சதவீத டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டாராம். அடுத்ததாக படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் (VFX) பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாம். அதனை ஹாலிவுட்டில் கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற படங்களுக்கு விஎஃப்எக்ஸ் (VFX) பணிகளை செய்து தந்த லோலா நிறுவனம் தொடங்கி இருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. மேலும் கோட் திரைப்படமானது செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.