துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அஜித்தின் 62 ஆவது படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதாவது திரிஷா அஜித்துக்கு ஜோடியாகவும் அர்ஜுன் வில்லனாகவும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இவர்களுடன் இணைந்து ஆரவ், ரெஜினா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் அஜர் பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து அஜித்துக்கு அறுவை சிகிச்சை, அஜர்பை ஜானில் காலநிலை மாற்றம் போன்றவற்றால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 50வது சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்ற உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மக்களவை தேர்தலுக்கு மறுநாள் நடைபெறும் எனவும் ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது வருகின்ற 27ஆம் தேதி மீண்டும் அஜர்பைஜானிலேயே தொடங்கப்பட இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் ரஜினியின் வேட்டையன் படத்தை மே மாதத்தில் முடித்த பின்னரே விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என லைக்கா நிறுவனத்தின் தரப்பில் தகவல் வெளியாகி வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -