Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகுமா 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல்? .... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இன்று வெளியாகுமா ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்? …. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகுமா என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இன்று வெளியாகுமா 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல்? .... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் அஜித்தின் அடுத்த படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தான் முதலில் 2025 பொங்கலுக்கு திரைக்கு வர இருந்தது. ஆனால் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் தான் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ரசிகர்களும் அஜித்தின் ஏதாவது ஒரு படம் பொங்கலுக்கு வந்தால் போதும் என்று நடிகர் அஜித்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். அதன்படி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டீசரில் அஜித்க்காக அனிருத் போட்ட தீம் மியூசிக் தற்போது பலரின் ரிங்டோனாக மாறி உள்ளது. எனவே இந்த படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் படம் ரிலீஸாவதற்கு இன்னும் 20 நாட்கள் தான் இருக்கிறது. இன்று வெளியாகுமா 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல்? .... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!அதற்குள் இந்த படத்தின் பாடல்களை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே வெளியான தகவலின் படி விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இந்த வார இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி இன்று (டிசம்பர் 21) விடாமுயற்சி படத்தின் முதல் பாடலை படக்குழு ரிலீஸ் செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ