Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

-

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தடம், தடையறத் தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் இணைந்திருந்த இந்தக் கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம். மேலும் இந்த படத்தில் ஆரவ், ரெஜினா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!ஏற்கனவே இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது. தற்போதைய இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அஜித், திரிஷா இருவரும் காண்பிக்கப்பட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

கிரீடம், ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களுக்கு பிறகு அஜித், திரிஷா ஜோடி விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ