விடாமுயற்சி படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜித்தின் 62வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மீகாமன், தடம், தடையற தாக்க ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றிக்கு இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாகும். அதே சமயம் இந்த படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் , டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. எனவே விடாமுயற்சி திரைப்படம் 2025 பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.