Homeசெய்திகள்சினிமாதாய்லாந்தில் படமாக்கப்படும் 'விடாமுயற்சி' படத்தின் பாடல் காட்சி!

தாய்லாந்தில் படமாக்கப்படும் ‘விடாமுயற்சி’ படத்தின் பாடல் காட்சி!

-

விடாமுயற்சி படத்தின் பாடல் காட்சி ஒன்று தாய்லாந்தில் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தாய்லாந்தில் படமாக்கப்படும் 'விடாமுயற்சி' படத்தின் பாடல் காட்சி!

அஜித்தின் 62 வது படமாக உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவியிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் நடிக்கின்றனர். அடுத்தது நடிகை ரெஜினா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே அஜர்பைஜான் , ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பாடல் காட்சி ஒன்று மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. தாய்லாந்தில் படமாக்கப்படும் 'விடாமுயற்சி' படத்தின் பாடல் காட்சி!இதற்காக படக்குழுவினர் பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக தாய்லாந்தில் லொகேஷன் பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே விரைவில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்று (நவம்பர் 28) எதிர்பாராத விதமாக விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ