Homeசெய்திகள்சினிமாவிரைவில் வருகிறது 'விடாமுயற்சி' புதிய ரிலீஸ் தேதி..... குழப்பத்தில் ரசிகர்கள்!

விரைவில் வருகிறது ‘விடாமுயற்சி’ புதிய ரிலீஸ் தேதி….. குழப்பத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

விடாமுயற்சி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.விரைவில் வருகிறது 'விடாமுயற்சி' புதிய ரிலீஸ் தேதி..... குழப்பத்தில் ரசிகர்கள்!

அஜித்தின் 62 வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தினை மீகாமன், தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் வருகிறது 'விடாமுயற்சி' புதிய ரிலீஸ் தேதி..... குழப்பத்தில் ரசிகர்கள்!அதே சமயம் இந்த படத்தில் இருந்து டீசரும், சவதீகா எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் பொங்கல் ரேஸிலிருந்து விடாமுயற்சி படம் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. அடுத்தது படத்தின் புதிய ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ஜனவரி 22, 23, 30,31 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்று தான் விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்றால் இந்த படம் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு தள்ளிப்போகும் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் அஜித் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் வருகிறது 'விடாமுயற்சி' புதிய ரிலீஸ் தேதி..... குழப்பத்தில் ரசிகர்கள்!இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும், எப்படியாவது அஜித்தை மீண்டும் திரையில் காண விடாமுயற்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

MUST READ