Homeசெய்திகள்சினிமாட்ரெய்லருடன் வருகிறது 'விடாமுயற்சி' ரிலீஸ் தேதி.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

ட்ரெய்லருடன் வருகிறது ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி…. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

-

- Advertisement -

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு ட்ரெய்லருடன் விரைவில் வெளியாக இருக்கிறது என புதிய தகவல் கிடைத்துள்ளது.ட்ரெய்லருடன் வருகிறது 'விடாமுயற்சி' ரிலீஸ் தேதி.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

அஜித் 62 வது படமாக விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ட்ரெய்லருடன் வருகிறது 'விடாமுயற்சி' ரிலீஸ் தேதி.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவில்லை. இதுவே ரசிகர்களின் பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சமீப காலமாக விடாமுயற்சி திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ட்ரெய்லருடன் வருகிறது 'விடாமுயற்சி' ரிலீஸ் தேதி.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!அதன்படி வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வரும் எனவும் விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லருடன் இதன் புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கனவே எதிர்பாராத விதமாக வெளியான விடாமுயற்சி டீசரில் தான் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டது. ஆகையினால் ட்ரெய்லருடன் இதன் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

MUST READ