ரஜினி தனது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் தயாராகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்றது. இதற்காக ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக படக்குழு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
‘Ulaganayagan' @ikamalhaasan & 'Superstar' @rajinikanth sharing a lighter moment while shooting for their respective films #Indian2 & #Thalaivar170 in the same studio after 21 years!
Both produced by @LycaProductions pic.twitter.com/y0AJsj4U8Y
— Rajasekar (@sekartweets) November 23, 2023