- Advertisement -
பள்ளிகளில் தேர்வு தொடங்கி இருக்கும் நிலையில், மாணவர்கள் நடிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்த நடிகர் சித்தார்த், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் சித்தார்த் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சித்தார்த் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மொழியிலும் சித்தார்த் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். நடிகர் மட்டுமன்றி திரைக்கதை எழுத்தாளர், பாடகர், உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் சித்தார்த். அண்மையில் அவரது நடிப்பில் வௌியான சித்தா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் சித்தார்த் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ஷைத்தான் கா பச்சா என்ற படத்திலும் அவர் நடிக்கிறார். இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், ஒன்றிய அரசுக்கு எதிராவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பல சமூக கருத்துகளை பேசி வருகிறார்.
"This is Ridiculous Trend… போய் படிங்க பா, ப்ளீஸ்🔥"#Siddharth #Trending #TrendingNow #cineulagam pic.twitter.com/5Lm34S44E6
— Cineulagam (@cineulagam) February 29, 2024