விதார்த் நடிக்கும் அஞ்சாமை படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் விதார்த், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியவர். அந்த வகையில் விதார்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று, குய்கோ, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து விதார்த், டெவில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. மேலும் விதார்த், லாந்தர், சமரன் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்ததாக விதார்த் நடிப்பில் அஞ்சாமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விதார்த்துடன் இணைந்து வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்பி சுப்புராமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க கார்த்திக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#Anjaamai Trailer is dropping tomorrow at 5 pm. Witness the magic unfold. #அஞ்சாமை @vidaarth_actor @vanibhojanoffl @actorrahman @SubbuRa31342936 @karthick_p_dop #RaghavPrasad @kala_charan @ramsudharsan30 @mokibastudios @prabhu_sr#AnjaamaiTrailer #AnjaamaiFromJune pic.twitter.com/n0cbO7ooMY
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 27, 2024
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் நாளை (மே 28) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் 2024 ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கிறது. எனவே நாளை வெளியாகும் ட்ரெய்லரில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.