Homeசெய்திகள்சினிமாவிதார்த் நடித்துள்ள 'லாந்தர்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

விதார்த் நடித்துள்ள ‘லாந்தர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

-

விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.விதார்த் நடித்துள்ள 'லாந்தர்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது!

நடிகர் விதார்த் நடிப்பில் 2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் டெவில் திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அடுத்ததாக விதார்த் நடித்திருந்த அஞ்சாமை திரைப்படம் கடந்த ஜூன் 7ம் தேதி திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது. இந்த படம் நீட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்தது. அதன் பின்னர் விதார்த் நடிப்பில் லாந்தர் எனும் திரைப்படம் கடந்த ஜூன் 21ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாஜி சலீம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விதார்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.விதார்த் நடித்துள்ள 'லாந்தர்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது! இதில் விதார்த் தவிர ஸ்வேதா டோரத்தி, விபின், சகானா, கஜராஜ், பசுபதி ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை எம் சினிமா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க பிரவீன் இசையமைத்திருந்தார் ஞான சௌந்தர் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான தற்போது இந்த படம் இன்று (ஜூலை 19) சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விதார்த் நடிப்பில் வெளியான அஞ்சாமை திரைப்படமும் சிம்பிளி சௌத் தளத்தில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ