நடிகர் விதார்த் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆயிரம் பொற்காசுகள் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் டெவில் திரைப்படம் வெளியானது. ஆனால் விதார்தத்திற்கு இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இதற்கிடையில் விதார்த் நடிப்பில் சமரன் எனும் திரைப்படமும் உருவாகி வருகிறது அதே சமயம் விதார்த், லாந்தர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராஜ்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாஜி சலீம் இயக்கியுள்ளார். இதில் விதார்த்தத்துடன் இணைந்து ஸ்வேதா டோரத்தி, பசுபதி ராஜா, சஹானா கௌடா, கஜராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரையும் பட குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தில் அயல் பிறை எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை உமாதேவி மற்றும் தேவா ஆகியோர் எழுதியுள்ள நிலையில் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். எம் எஸ் பிரவீன் இசையமைத்துள்ளார். எம் சினிமா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.