விதார்த் நடிக்கும் அஞ்சாமை… டிரைலர் வெளியீடு…
விதார்த் நடிக்கும் அஞ்சாமை படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியானது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விதார்த். இவர் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் நாயகனாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இத்திரைப்படத்தில் விதார்த்தின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதையடுத்து, குற்றமே தண்டை, குரங்கு பொம்மை உள்பட பல திரைப்படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
இதையடுத்து இறுதியாக இறுகப்பற்று திரைப்படத்தில் விதார்த் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்திருந்தனர். இத்திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. விதார்த்தின் நடிப்பும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, லாந்தர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.
இதையடுத்து விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் அஞ்சாமை. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. எஸ் பி சுப்புராமன் இத்திரைப்டத்தை இயக்கி இருக்கிறார், ராகவ் பிரசாத் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில், அஞ்சாமை திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது.