Homeசெய்திகள்சினிமாநாளை ஓடிடியில் வெளியாகும் விதார்த்தின் 'அஞ்சாமை'!

நாளை ஓடிடியில் வெளியாகும் விதார்த்தின் ‘அஞ்சாமை’!

-

விதார்த் நடிப்பில் வெளியான அஞ்சாமை திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை ஓடிடியில் வெளியாகும் விதார்த்தின் 'அஞ்சாமை'!

நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை, மைனா போன்ற பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடந்தாண்டு விதார்த் நடிப்பில் வெளியான ஆயிரம் பொற்காசுகள் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விதார்த் டெவில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்ததாக விதார்த் அஞ்சாமை எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விதாரத்துடன் இணைந்து ரஹ்மான், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நாளை ஓடிடியில் வெளியாகும் விதார்த்தின் 'அஞ்சாமை'!நீட் தேர்வு சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை எஸ் பி சுப்புராமன் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ராகவ் பிரசாத் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இந்த படம் நாளை (ஜூலை 19) சிம்ப்ளி சௌத் ஓடிடி தலத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ