Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் வசூல் வேட்டை நடத்தும் விடுதலை... சாதித்துக் காட்டிய வெற்றிமாறன்!

தெலுங்கில் வசூல் வேட்டை நடத்தும் விடுதலை… சாதித்துக் காட்டிய வெற்றிமாறன்!

-

- Advertisement -
kadalkanni

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் தேர்ந்த இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் மூலம் மீண்டும் தன்னை ஆகச்சிறந்த இயக்குனராக முன்னிறுத்தியுள்ளார்.

soori-in-viduthalai.jpg
soori-in-viduthalai

சூரி படத்தின் கதாநாயகனாக, அந்தக் காவலர் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். விஜய் சேதுபதி வாத்தியாராக வந்து மிரட்டுகிறார். பவானி ஸ்ரீ, இயக்குனர் ராஜீவ்  மேனன், கௌதம் மேனன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களின் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

படத்தின் காட்சிகளின் ஆழத்தை அறிந்து அதற்கு ஏற்ப இசையமைத்து ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

‘விடுதலை’ படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுதலை திரைப்படம் விடுதலா என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. அல்லு அர்ஜுனின் தந்தை இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட்டுள்ளார்.

படத்திற்கு தெலுங்கிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலே ‘விடுதலா’ திரைப்படம் தெலுங்கில் 1.5 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. வரும் நாட்களில் வசூல் மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ