Homeசெய்திகள்சினிமாமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘விடுதலை 2’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் நேற்று (டிசம்பர் 20) மிகுந்த எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் இணைந்து கென் கருணாஸ், சேத்தன், இளவரசு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விடுதலை முதல் பாகம் நடிகர் சூரியை சுற்றி நகர்ந்தது. இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நகர்கிறது. அதன்படி ஒரு வாத்தியார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு போராளியாக எப்படி மாறுகிறார்? என்பதைப் பற்றிய கதைதான் விடுதலை 2. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. அடுத்தது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?மேலும் இயக்குனர் வெற்றிமாறன் சொல்ல வந்த கருத்தை நெற்றி பொட்டில் அடித்தது போல அழுத்தமான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறார். மேலும் விடுதலை 2 படத்திற்காக அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வசனங்களும் சாட்டையால் அடித்தது போன்று இருக்கிறது. இவ்வாறு இந்த படம் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியிருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ