வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனமும் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இசைஞானி இளையராஜா இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பொதுவாக தணிக்கை குழு, ஒரு படத்தில் வன்முறையான காட்சிகள் அல்லது ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருந்தால் தான் ஏ சான்றிதழ் வழங்கும். ஆனால் விடுதலை 2 திரைப்படத்தில் ஒரே ஒரு வசனத்திற்காக ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
The wait ends in 6 days. Prepare for an epic continuation. Director #VetriMaaran ‘s #ViduthalaiPart2 is releasing on December 20.
An @ilaiyaraaja Musical #ViduthalaiPart2FromDec20@VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4… pic.twitter.com/WlO9CYwkUP
— RS Infotainment (@rsinfotainment) December 14, 2024
அதாவது நடிகர் ராஜீவ் மேனன் இந்த படத்தில் தலைமை செயலாளராக நடித்திருக்கும் நிலையில் அவர் பேசும் ஒரு வசனத்திற்காக தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாம். மேலும் இந்த வசனத்தை நீக்க வேண்டும் என தணிக்கை குழு வெற்றி மாறனிடம் சொன்னபோது வெற்றிமாறன் இந்த வசனம் தான் படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் என்று அதை நீக்க மறுத்து ஏ சான்றிதழுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் வெற்றிமாறன்.